புதுடெல்லி
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உத்தரபிரதேசத்தில் போலீஸ் நடவடிக்கை என்று கூறிய வீடியோவை ட்வீட் செய்த பின்னர் பங்களாதேஷில் நடந்த ஒரு சம்பவமாக வெளிவந்ததை அடுத்து வெளியுறவு அமைச்சகம் அவதூறாக பேசியது.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தனது ட்விட்டர் பக்கத்தில் உத்தரபிரதேசத்தில் முஸ்லிம்களை குறிவைத்து போலீஸ் வன்முறை நடத்துகிறது என்று கூறி ஒரு வீடியோவைப் பகிர்ந்து இருந்தார். அதற்கு அவர் “உ.பி.யில் உள்ள முஸ்லிம்களுக்கு எதிரான இந்திய காவல்துறையின் படுகொலை என தலைப்பிட்டு இருந்தார்.
ஆனால் அந்த வீடியோ வங்காளதேசத்தில் நடந்த வன்முறை வீடியோ. இதனால் ட்விட்டரில் இம்ரான்கானுக்கு எதிராக விமர்சனம் எழுந்தது. உடனடியாக அவரது ட்விட்டரில் இருந்து அந்த வீடியோ பதிவு நீக்கப்பட்டது.
இது உத்தரபிரதேசத்தில் நடந்தது அல்ல ஆனால் மே, 2013, வங்காளதேசத்தின் டாக்காவில் நடந்த ஒரு சம்பவம் ஆகும் என உத்தரப்பிரதேச காவல்துறை தனது ட்விட்டரில் தெரிவித்து உள்ளது.
இம்ரான்கானின் இந்த ட்விட்டிற்கு இந்திய வெளியுறவுத்துறை கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
“போலி செய்திகளை ட்வீட் செய்யுங்கள். பிடிபடுங்கள். ட்வீட்டை நீக்குங்கள் . மீண்டும் சொல்லுங்கள்,” என்று வெளிவிவகார அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் ட்வீட் செய்துள்ளார்.