தெலுங்கானாவில் பாலியல் குற்றவாளிகளை சுட்டுக் கொல்ல என்கவுன்ட்டருக்கான அனுமதி அளித்து இருக்கும் சைபராபாத் காவல் துறை எஸ்.பி. விசி சஜ்ஜனார் ஏற்கனவே பலமுறை என்கவுன்ட்டர்களை நடத்தி உள்ளார். தற்போது இவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன
இதில் தொடர்புடைய குற்றவாளிகள் முகமது பாஷா, நவீன், சிவா, கேசவலு ஆகிய 4 பேரை காவல் துறை கைது செய்து சிறையில் அடைத்தது. இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் இன்று காலை நான்கு பேரும் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த என்கவுன்ட்டருக்கு சைபராபாத் காவல்துறை எஸ்.பி. விசி சஜ்ஜனார் அனுமதி அளித்துள்ளார்.