மும்பை : இந்திய சினிமாவை உலக சினிமாக்களுடன் போட்டி போட வைத்தவர்களில் முக்கியமானவர் பிரபல பாலிவுட் நாடிகர் அமீர் கான். அவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் பொழுதுபோக்கிற்கான படங்களாக மட்டும் இன்றி, சமூகத்திற்கான படங்களாகவும் இருக்கின்றன. அமீர் கானின் நடிப்பில் வெளியான 'கயாமத் சே கயாமத் தக்', 'ராக்', 'குலாம்', 'லகான்', 'தாரே சமீன் பர்', '3 இடியட்ஸ்', 'பி.கே', 'தங்கல்', கடைசியாக நடித்த 'தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான்' என அனைத்துப் படங்களும் இந்திய மக்களால் மறக்க முடியாத படங்களாகும்.
உலக சினிமா ரசிகர்களை உலுக்கிய ‘ஃபாரஸ்ட் கம்ப்’! - அமீர் கான் நடிப்பில் ரீமேக் ஆகிறது