சங்ககிரியில் குடிமராமத்து, வளர்ச்சி பணிகள் மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் நேரில் ஆய்வு!

சேலம், செப். 20சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் குடிமராமத்து திட்டம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை ஆட்சியர் சி. அ. ராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதன்படி, சங்ககிரி ஊராட்சி ஒன் றியம், மோரூர் மேற்கு ஊராட்சியில் மீனா ஆறுமுகம் தம்பதியினர் பாரத பிரமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் .1.70 லட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டி வரும் பணியினையும், முதல்வரின் குடிமராமத்து திட்டத் தின் கீழ் ரூ.1.60 லட்சம் மதிப்பீட்டில் வன்னாங்குட்டை புனரமைக்கும் பணி மற்றும் வீராட்சி பாளையம் ஊராட்சியில் வீராட்சி பாளையம் ஏரி ரூ.5லட்சம் மதிப்பீட்டில் புனர மைத்து, வரத்து வாய்க்கால் சீரமைக்கும் பணிகளையும் மாவட்ட ஆட்சியர் ராமன் நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து சின்னக்கவுண்டனூர் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு முட்டையுடன் கூடிய சத்துணவு வழங்கப்பட்டு வருவதை ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த தோடு, அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு அரசு அறிவித்துள்ள விதி முறைகளின் படி சத்தான உணவுகளை நாள்தோறும் சிறப்பாக சமைத்து வழங்க வேண்டும் எனவும், குழந்தைகளின் ஆரோக்கியத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும் நாள் தோறும் சமைத்து குழந்தைகளுக்கு வழங்கும் சத் துணாவின் மாதிரியினை நாள்தோறும் எடுத்து வைக்க வேண்டும் எனவும், அங்கன்வாடி பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார். பின்னர் அருகில் இருந்த மொத் தையலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தின் கட்டுப் பாட்டில் உள்ள சின்ன கவுண்டனூர் நியாய விலை கடையில் அரிசி, பருப்பு, சக்கரை உள்ளிட்ட அத்தி பாவசிய பொருட்களின் இருப்பு குறித்தும் குடும்ப அட்டைதாரர் களுக்கு தரமான பொருட்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வரு கின்றதா என்பது குறித்தும் ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு அத்தியவசிய பொருட் களை குடும்ப அட்டை தாரர்களுக்கு தடையின்றி வழங்கிட வேண்டுமென பணியாள ருக்கு உத்தரவிட்டார். அப்போது அவர் கூறுகையில், ''மழைக்காலம் தொடங்கியுள்ளதால் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு களை பும், முதல்வரின் குடிமராமத்து திட் டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் ஏரி குளங்கள், குட்டைகள், கண்மாய் கள், வரத்து வாய்காள்கள் சீர்மைக்கும் பணிகள் உள்ளிட்ட அனைத்து பணி களையும் விரைந்து முடிக்கட வேண் டும் எனவும் மக்களின் குடிநீர் சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதி களையும் முழுமை பாக ஏற்படுத்த வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட் டுள்ளது,'' என்றார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் நா.அருள்ஜோதி அரசன், சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் எம். அமிர்தலிங்கம், சங்ககிரி வட்டாட்சியர் கே.ஆர்.பாலாஜி, சங்ககிரி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் என்.எஸ்.ரவிச்சந்திரன், எம்.அனுராதா, உதவி பொறியாளர்கள் ஆர்.அன்புராஜ், கே.கானிஷ்வரி உட்பட பலர் உடன் இருந்தனர்.