கூலிப்படையை ஏவி தொழில் அதிபரை கொன்ற பெண் வக்கீல் கைது

அடையாறு இந்திரா நகர் முதல் அவென்யூ பகுதியில் வசித்து வந்த தொழில் அதிபர் சுரேஷ் பரத்வாஜ், கடந்த ஜூன் மாதம் 21ந்தேதி திடீரென காணாமல் போனார். காணாமல் போன அன்று தனது செல்போனை கார் டிரைவரிடம் கொடுத்து விட்டு அருகில் உள்ள வக்கீல் வீட்டுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சுரேஷ்பரத்வாஜ் சென்றார். அதன் பின்னர்தான் அவர் வீடு திரும்பவில்லை. இதனை தொடர்ந்து அந்த வக்கீல் யார்? என்பது பற்றிய விசாரணையில் போலீசார் இறங்கினர். அப்போது சுரேஷ் பரத்வாஜ் பிரித்தி என்கிற பெண் வக்கீலை பார்க்க சென்றது தெரியவந்தது. இதையடுத்து பிரித்தியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் அவர் அளித்த பதில் போலீசுக்கு திருப்தி அளிக்கவில்லை. இதன் காரணமாக அடுத்த கட்ட விசாரணை முடுக்கி விடப்பட்டது.) பிரித்தியை சந்தித்து பேசிய சுரேஷ் பரத்வாஜ், பின்னர் ஆட்டோவில் ஏறிச் சென்றது தெரியவந்தது. பெண் அந்த ஆட்டோ டிரைவர் யார்? என்பதை கண்டு பிடித்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர், சுரேஷ் பரத்வாஜை காசிமேட்டில் கொண்டு போய் விட்டதாக கூறினார். இதன் பின்னர் சுரேஷ் பரத்வாஜ் எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்பது தெரியா மலேயே இருந்தது. இதற்கிடையே அடையாறு துணை கமிஷனராக


பட்டியலை போலீசார் சேகரித்தனர். இதில் காசிமேட்டை சேர்ந்த பிரகாஷ் என்கிற குடும்பி பிரகாஷ் என்பவரிடம் பிரித்தி பலமுறை போனில் பேசியது தெரிய வந்தது. அதே நேரத்தில், மாயமான தொழில் அதிபர் சுரேஷ் பரத்வாஜிடமும் அவர் தொடர்ந்து பேசியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பிரித்தி, குடும்பி பிரகாஷ் இருவர் மீதும் போலீசுக்கு சந்தேகம் வலுத்தது. குடும்பி பிரகாசையும், அவரது கூட்டாளிகளான மனோகர், சுரேஷ், ராஜா, சந்த்ரு ஆகியோரையும் பிடித்து விசாரணை நடத்தினர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பெண் தகராறில் சுரேஷ் பரத்வாஜ் நடு க்கடலுக்கு செல்லப்பட்டு தீர்த்துக்கட்டப்பட்டது தெரிய வந்தது. காசிமேட்டுக்கு கடந்த ஜூன் மாதம் 21ந்தேதி